கரூர்: கரூரில், வரும், 20ல் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓவிய போட்டி நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கரூர் பிரம்மதீர்த்தம் சாலையில் உள்ள நாரத கான சபாவில், வரும், 20ல் மாற்றத்திறனாளிகள் ஓவிய போட்டி நடக்கிறது. டிச., 3ல் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகி-றது. அதன் ஒரு பகுதியாக செவித்திறன் குறைபாடுடையோர், இயக்கதிறன் குறைபாடுடையோர், அறிவுசார் குறைபாடு-டையோர், புற உலக சிந்தனையற்றோர், மூளை முடக்குவா-தத்தால் பாதிக்கப்பட்டோர், பார்வைத்திறன் குறைபாடுடையோ-ருக்கு மாவட்ட அளவில் ஓவிய போட்டி நடக்கிறது. 10 வயதிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகள், கிரையான்ஸ் மற்றும் வண்ண பென்சில் பயன்படுத்தியும், 11--18 வயது வரை, வாட்டார் கலர் போன்ற பொருட்களை பயன்ப-டுத்தியும், 18 வயதிற்கு மேற்பட்டோர் எந்த பொருட்களை வேண்டுமானாலும் பயன்படுத்தி விருப்பப்பட்ட தலைப்பில் ஓவியம் வரையலாம். ஓவிய போட்டியில் கலந்துகொள்ள http://q.me-qr.com/mk9ORAPC என்ற இணையதளத்தில் விபரங்-களை, நாளைக்குள் பதிவு செய்ய வேண்டும். ஓவிய போட்டியில் கலந்துகொள்ளும் மாற்றுத்திறனாளிகள், அடையாள அட்டை மற்றும் வரைவதற்கான பொருட்கள், சார்ட் பேப்பர் போன்ற-வற்றை எடுத்து வரவேண்டும்.ஓவிய போட்டியில் முதல் இடங்களை பிடிக்கும் மாற்றுத்திறனா-ளிகளுக்கு பரிசுத்தொகையாக, 1,000, 500, 250 ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.