உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பள்ளப்பட்டி, அரவக்குறிச்சிக்கு இரவு நேரத்தில் பஸ்கள் தேவை

பள்ளப்பட்டி, அரவக்குறிச்சிக்கு இரவு நேரத்தில் பஸ்கள் தேவை

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, பள்ளப்பட்டிக்கு இரவு நேரத்தில் பஸ்கள் தேவை என, நாம் தமிழர் கட்சி சார்பில், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, பள்ளப்பட்டியில் பகுதியில், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்-ளவர்கள், பல்வேறு மாவட்டங்களில் வேலை செய்து வருகின்-றனர். அந்த ஊர்களுக்கு பஸ்கள் மூலம் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அரவக்குறிச்சி வழியாக திண்டுக்கல் செல்லும் பஸ்கள் இரவு, 9:00 மணிக்கு மேல் நின்று விடுகிறது. இரவு நேரங்களில் பஸ்கள் இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்-றனர். காரில் பயணம் செய்ய வேண்டி உள்ளது. இரவு நேரத்தில் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை