உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாவட்ட கூடைப்பந்து போட்டி பள்ளப்பட்டி பள்ளி அசத்தல்

மாவட்ட கூடைப்பந்து போட்டி பள்ளப்பட்டி பள்ளி அசத்தல்

அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், கூடைப்பந்து போட்டியில் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்தனர்.கரூர் வருவாய் மாவட்ட அளவிலான, மாணவர்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டி எம். குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் நேற்று நடந்தது. இதில் பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்தனர். 17 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும் மூன்றாம் இடம் பிடித்தனர்.வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஹாஜி கஜனபர் அலி, தலைமை ஆசிரியர் முகமது இஸ்மாயில், உதவி தலைமை ஆசிரியர்கள் தாஜுதீன், பள்ளப்பட்டி எஜுகேஷன் சொசைட்டியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை