பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா: உற்சவர் திருவீதி உலா
கரூர்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா-வையொட்டி, நேற்று நான்காவது நாளாக திருவீதி உலா நடந்தது.பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கடந்த, 3ல் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது. தொடர்ந்து, பல்வேறு சிறப்பு வாகனங்களில், உற்-சவர் திருவீதி உலா நடந்து வருகிறது. நேற்று இரவு உற்சவர் சோமஸ் கந்தன், சவுந்திர நாயகி ரிஷப வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.நாளை காலை சுவாமி, அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு அபிேஷகம், வரும், 9ல் திருக்கல்யாண உற்சவம், 11ல் தேரோட்டம், 12ல் தீர்த்தவாரி, 13ல் ஆளும் பல்லாக்கு, 14 ல் ஊஞ்சல் உற்சவம், 15ல் வெள்ளி வாகனத்தில் உற்சவர் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சி நடக்கிறது.