உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சி அரசு பள்ளியில் பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம்

அரவக்குறிச்சி அரசு பள்ளியில் பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம்

அரவக்குறிச்சி: தமிழக அரசு, அனைவருக்கும் கல்வி என்ற கொள்கையை முழுமையாக செயல்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், பள்ளிகளில் பெற்றோர்களின் பங்கை அதிகரிக்கும் வகையில், பள்ளி மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த, இரண்டாண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட இக்குழு, தன்னுடைய பதவிக்காலத்தை கடந்த ஜூலையோடு நிறைவு செய்தது. புதிய குழுவை தேர்ந்தெடுக்கும் பொருட்டு, பெற்றோருக்கான விழிப்புணர்வு கூட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் சாகுல் அமீது தலைமையில் நடந்தது. பள்ளி மேலாண்மைக்குழு நிகழ்வுகளை, வட்டாரக்கல்வி அலுவலர் பாண்டித்துரை, வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) தமிழ்ச்செல்வி ஆகியோர் விளக்கி கூறினர். மேலும், இந்தாண்டு, 20 உறுப்பினர் எண்ணிக்கையிலிருந்து, 24 உறுப்பினராக அரசு உயர்த்தி உள்ள விஷயத்தை பெற்றோர்களுக்கு கூறப்பட்டது. வரும் ஆக., 31ல் நடக்கும், பள்ளி மேலாண்மை மறு கட்டமைப்புக்கான தேர்தலில், அனைவரும் பங்கேற்று அதில் உறுப்பினராகி பள்ளிக்கு செயலாற்ற வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.ஆசிரியர்கள் ஷகிலா பானு, சகாய வில்சன், ராபியா பஸ்ரி, ரொகையா பீவி, கவிதா, கிருஷ்ணவேணி புவனேஸ்வரி, ஜோதிமணி சங்கர், ரூபா, நாகராஜன், உஷாராணி, தஸ்லீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ