உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் சர்ச் கார்னர் பஸ் ஸ்டாப்பில் ஆக்கிரமிப்பால் பயணிகள் தவிப்பு

கரூர் சர்ச் கார்னர் பஸ் ஸ்டாப்பில் ஆக்கிரமிப்பால் பயணிகள் தவிப்பு

கரூர்: கரூர், சர்ச் கார்னர் பஸ் ஸ்டாப்பில் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதால், பயணிகள் நிற்க முடியாமல் தவிக்கின்றனர்.கரூர் சர்ச் கார்னர் சாலையோர பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் உள்ளது. இங்கு வெங்கமேடு, வெண்ணைமலை, வாங்கபாளையம், மண்மங்கலம், உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் பயணிகள் ஏறி செல்கின்றனர். நிழற்கூடத்தை ஓட்டி ஏராளமான தள்ளுவண்டி கடைகள் செயல்படுகின்றன. இதுமட்டுமின்றி விடுமுறை தினங்களில், இறைச்சி கடைகளும் இயங்குகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இந்த பஸ் ஸ்டாப்பில் பயணிகள் அமர முடியாமல், சாலையில் பஸ்சுக்கு காத்திருக்க வேண்டும். பஸ், மினி பஸ்கள் நிற்கும் போது, எதிரில் வரும் வாகனங்களுக்கு வழிவிடும்போது, சாலையோரம் ஒட்டி செல்ல வேண்டியுள்ளது. அப்போது சாலையோரம் நிற்கும் பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே போக்குவரத்து போலீசார், சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி