ஆர்.டி.ஓ., ஆபீஸில் பராமரிப்பு இல்லாத கழிப்பிடத்தால் மக்கள் கடும் அவஸ்தை
ஆர்.டி.ஓ., ஆபீஸில் பராமரிப்பு இல்லாதகழிப்பிடத்தால் மக்கள் கடும் அவஸ்தைகரூர், நவ. 7-கரூர் ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் உள்ள கழிப்பிடம் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.கரூர் மாவட்ட பழைய கலெக்டர் அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., அலுவலகம் செயல்படுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில், வணிக வரி அலுவலகம், ஆர்.டி. ஓ., இல்லம் ஆகியவை உள்ளது. கடந்த சில மாதங்களாக, ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் உள்ள கழிப்பிடம் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. மேலும் இங்குள்ள மின் கம்பங்களில் விளக்குகள் எரிவது இல்லை. சில மின் கம்பங்கள் உடைந்த நிலையிலும், சாய்ந்தும் உள்ளது.ஆர்.டி.ஓ., அலுவலக ஊழியர்கள் இரவு நேரத்தில் கார், பைக் உள்ளிட்டவைகளை நிறுத்தி விட்டு செல்கின்றனர். அதில், கடந்த சில நாட்களாக உதிரி பாகங்களை, மர்ம நபர்கள் திருடி செல்லும் சம்பவம் நடந்து வருகிறது. இங்கு விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இந்நிலையில் விளக்குகள் எரியாததால், பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே, கழிப்பிடத்தை பராமரித்து, அனைத்து விளக்குகளையும் எரிய வைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.