உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சி பகுதியில் தெருநாய் தொல்லையால் மக்கள் கடும் அவதி

அரவக்குறிச்சி பகுதியில் தெருநாய் தொல்லையால் மக்கள் கடும் அவதி

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சியில், தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால், மக்கள் அச்சப்படுகின்றனர்.அரவக்குறிச்சியில் வடக்கு தெரு, காமராஜ் நகர், மாரியம்மன் கோவில் தெரு, அம்மன் நகர், பள்ளிவாசல் தெரு, கலைவாணர் தெரு, பாவா நகர், பொன் நகர், மார்க்கெட் தெரு, சுப்ரமணியசுவாமி கோவில் பின்புறம், பெரியகடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் பல்வேறு தொல்லைக்கு ஆளாகின்றனர்.சிறுவர், சிறுமியர் தெரு நாய்களை பார்த்ததும் ஓடுவதால், அவர்களை துரத்தி கடிக்கின்றன. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை, துரத்துவதால் சிறு சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. இரவில் தெருநாய்கள் கூட்டமாக சேர்ந்து, அவைகளுக்குள் கடித்துக் கொள்கின்றன. இதனால் இரவில் நிம்மதியாக துாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, அரவக்குறிச்சி பகுதியில் நடமாடும் தெரு நாய்களை கட்டுப்படுத்த, கருத்தடை முகாம் நடத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ