உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / க.பரமத்தியில் கால்நடை தீவன சந்தை அமைக்க மக்கள் கோரிக்கை

க.பரமத்தியில் கால்நடை தீவன சந்தை அமைக்க மக்கள் கோரிக்கை

கரூர்: க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. இப்பகுதியில் மாடு, பசு, எருது, எருமை, வெள்ளாடு, செம்மறி ஆடு போன்ற கால்ந-டைகளை வளர்த்து வருகின்றனர். இதற்காக பலர் தங்களது தோட்டத்தில் தீவன பயிர்களான கம்பு ஒட்டுப்புல், கினியாபுல், கொழுக்கட்டை புல், பயறு வகையில் வேலிமசால், குதிரை-மசால், முயல்மசால், தீவன தட்டைபயிர் போன்றவை பயிரிட்டு கால்நடைகளுக்கு உணவாக கொடுத்து வருகின்றனர். தீவன பயிர்-களை வளர்க்க நிலம் இல்லாத விவசாயிகள் சிலர் தோட்டங்-களை குத்தகைக்கு எடுத்து கால்நடைகளை பராமரித்து வருகின்-றனர்.இதுமட்டுமல்லாது கால்நடைகளை சாலையோரத்தில் மேய-விட்டு வளர்த்து வருகின்றனர். மாடு, பசு, எருது, எருமை, வெள்-ளாடு, செம்மறி ஆடு போன்ற கால்நடைகளை தன்னிச்சையாக மேய விடும்போது தோட்டங்கள் மற்றும் பயிர்களில் புகுந்து சேதப்படுத்தும் அபாயம் உள்ளது. கால்நடைகளை விற்க பல்-வேறு பகுதிகளில் சந்தை உள்ளன. இதுபோல தீவன சந்தை அமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ