உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குடிநீர் தொட்டி சேதம் அகற்ற மக்கள் கோரிக்கை

குடிநீர் தொட்டி சேதம் அகற்ற மக்கள் கோரிக்கை

கரூர்: கரூர் அருகே, மேல்நிலை குடிநீர் தொட்டி சேதமடைந்துள்ளது. அதை, அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.கரூர்-திருச்சி சாலை, காந்தி கிராமம் அருகே, கடந்த, 2006-07ல், சணப்பிரட்டி பஞ்., சார்பில், 60,000 லிட்டர் கொள்ள-ளவு கொண்ட, குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது. கடந்த, 2011ல் சணப்பிரட்டி பஞ்., கரூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. அதன் மூலம், திருச்சி சாலையில் உள்ள வீடு-களுக்கு, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், மேல்நிலை குடிநீர் தொட்டி சேதமடைந்தது. இதனால், தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டது.குறிப்பாக, சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கான்கிரீட் கம்-பிகள் வெளியே தெரியும் நிலை உள்ளது. எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில், மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இதனால், சாலையில் செல்வோர் அச்சத்தில் உள்ளனர். எனவே, பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன், மேல்நிலை குடிநீர் தொட்டியை அகற்ற, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்-பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை