உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / துணை மின் நிலையம் அமைக்க மக்கள் கோரிக்கை

துணை மின் நிலையம் அமைக்க மக்கள் கோரிக்கை

குளித்தலை : குளித்தலை நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளுக்கு, அய்யர்மலை துணை மின் நிலையத்தில் இருந்து பல ஆண்டுகளாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. 11 கி.மீ., தொலைவில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருவதால், நகர பகுதியில் குறைந்த அளவு மின்சாரம் வருகிறது. இதனால், பொது மக்கள், மருத்துவமனை, வணிக நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன.பொது மக்கள் கோரிக்கையை ஏற்று, ராஜேந்திரம் பஞ்., திருச்சி - கரூர் நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை இடையில், பட்டவர்த்தியில் புதிய துணை மின் நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தினர்.இந்த இடத்தில் மின்சார வாரியம் விரைந்து, துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ