உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரயில்வே மேம்பாலத்தில் தடுப்பு அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

ரயில்வே மேம்பாலத்தில் தடுப்பு அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

கரூர் கரூரில், ரயில்வே மேம்பாலத்துக்கு கீழ் பகுதியில் செல்லும்போது, கழிவு நீர் படாமல் இருக்கும் வகை யில், தடுப்புகள் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர், பசுபதிபாளையம் ஐந்து சாலை அருகே நெரூர் சாலையில், திருச்சி மற்றும் திண்டுக்கல் செல்லும் ரயில்வே இருப்பு பாதை உள்ளது. இதற்கு அடியில், நெரூர், வாங்கல் செல்ல சாலை அமைக்கப்பட்டு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. கரூரில் இருந்து திருச்சி மற்றும் திண்டுக்கல் மார்க்கத்தில் நாள்தோறும், 40க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. மேம்பாலத்தின் கீழே உள்ள சாலை வழியாக வாங்கல், நெரூர், கோயம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பொதுமக்கள் பல்வேறு வாகனங்களில் சென்று வருகின்றனர்.மேம்பாலத்தில் ரயில்கள் செல்லும் போது, பயணிகள் கழிவறையை பயன்படுத்தும் நேரத்தில், கழிவுநீர் பாலத்துக்கு கீழே செல்லும் பொதுமக்கள் மீது விழுகிறது. இதனால், மேம்பாலத்தில் ரயில் செல்லும் போது, பொதுமக்கள் ஒதுங்கி நின்று விடுகின்றனர். குறிப்பாக, பிரசித்தி பெற்ற நெரூர் சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்துக்கு, ரயில்வே மேம்பாலம் கீழே உள்ள சாலை வழியாகத்தான் பெரும்பாலும் செல்ல வேண்டும். அப்போது, ரயிலில் இருந்து கழிவுநீர் விழுவதால், பொதுமக்கள் சங்கடப்படுகின்றனர். பசுபதிபாளையம் ஐந்து சாலை அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தில், தடுப்பு சுவர் அமைக்க பலமுறை கோரிக்கை வைத்தும், ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.எனவே, ரயில்வே மேம்பாலத்தில் தடுப்பு அமைக்க, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ