பாதையை மறித்து தடுப்பு சுவர் மக்கள் சாலை மறியல் போராட்டம்
குளித்தலை: பொது வழிப்பாதையை மறித்து தடுப்பு சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.குளித்தலை அடுத்த வரவணையில், 25க்கும் மேற்பட்ட குடும்பத்-தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் பலருக்கும் குல-தெய்வமாக கருப்பண்ணசாமி கோவில் அமைந்துள்ளது. பல தலைமுறைகளாக, கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்த வரவ-ணை-சிந்தாமணிப்பட்டி சாலையில் இருந்து பிரிந்து செல்லும் மண் சாலையை பொதுவழிப்பாதையாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சாலை அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் குறிப்பிட்ட மக்கள் அங்காளம்மன் கோவிலை கட்டி வழிபாடு செய்து வருகின்றனர். தற்போது, இந்த கோவில் ஹிந்து சமய அற-நிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலை சுற்றி பொது வழிப்பாதையை மறித்து தடுப்பு சுவர் எழுப்ப நடவடிக்கை மேற்-கொண்டு வருகின்றனர்.இதனால், அப்பகுதியை சேர்ந்த கோவில் வழிபாட்டுக்காரர்கள், விவசாயிகள் பொது வழிப்பாதையை மறித்து தடுப்பு சுவர் கட்-டக்கூடாது என, மாவட்ட நிர்வாகம் மற்றும் ஹிந்து சமய அறநி-லையத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்திருந்தனர். ஆனால், அதிகாரிகள், 'கோவிலுக்கு சொந்தமான இடம் என்பதால், தடுப்பு சுவர் கட்டப்படும் என்றும், வழிப்பாதை தர முடியாது என்றும்' கடிதம் மூலம் பதிலளித்தனர்.இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், விவசாயிகள், நேற்று காலை, 9:00 மணிக்கு, கரூர்-சிந்தாமணிப்பட்டி நெடுஞ்சாலை குறுக்கே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல-றிந்த கடவூர் தாசில்தார் ராஜாமணி மற்றும் சிந்தாமணிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார், பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் மூலம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.