உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பள்ளி மாணவ, மாணவியருக்கு பூச்சி மருந்து பாதிப்பு விழிப்புணர்வு

பள்ளி மாணவ, மாணவியருக்கு பூச்சி மருந்து பாதிப்பு விழிப்புணர்வு

கிருஷ்ணராயபுரம்: பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு, விவசாய பயன்பாடுகளில் பூச்சி மருந்துகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த சேங்கல் தனியார் பள்ளி வளா-கத்தில், இந்திய அரசு வேளாண்மை, உழவர் நல அமைச்சகத்தின் பயிர் பாதுகாப்பு நோய் தடுப்பு மற்றும் சேமிப்பு இயகுனரகம், திருச்சி மத்திய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மையம் சார்பில், விவசாயத்தில் பூச்சி மருந்து அளவுக்கு அதிகமாக உபயோகிப்-பதால் ஏற்படும் தீமைகள், அதனை தடுப்பதற்கான வழிமு-றைகள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.இதில், பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு விளக்-கமளிக்கப்பட்டது. பூச்சியியல் உதவி இயக்குனர் சிவராமகி-ருஷ்ணன், மத்திய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மையம் தொழில்நுட்ப உதவி அலுவலர்கள் சுருளிராஜன், அபின், உதவி பயிர் பாதுகாப்பு அலுவலர்கள் அமுதா, பள்ளி தலைமை ஆசி-ரியர் ரவிக்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்-பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை