உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சக்திபுரம் வழியாக மருத்துவக்கல்லுாரி வரை மினி பஸ் இயக்க கோரி மனு

சக்திபுரம் வழியாக மருத்துவக்கல்லுாரி வரை மினி பஸ் இயக்க கோரி மனு

கரூர், கரூர், தான்தோன்றிமலை சக்திபுரம் வழியாக அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வரை, மினி பஸ் இயக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது:மாநகராட்சிக்குட்பட்ட, 39, 41, 42-வது வார்டுகளில் கணபதிபாளையம், விக்னேஸ்வரா நகர், காமராஜ் நகர், பசுபதி நகர், சக்திபுரம், சிவாஜி நகர், அண்ணா நகர், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இங்கு, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கோ அல்லது திருச்சி, பெரம்பலுார், அரியலுார், சென்னை நகரங்களுக்கு செல்வதென்றால், கரூர்-திண்டுக்கல் சாலையில் உள்ள சுங்ககேட் சென்று, பின்னர் அங்கிருந்து திருச்சி வழியாக இயக்கப்படும் பஸ்களில் சென்று வருகிறோம்.இப்பகுதியில் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள், கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், நீதிமன்றங்களில் பணிபுரிவோரும் உள்ளனர். இந்த பகுதியில் பஸ் வசதி இல்லாததால் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், 1 கி.மீ., தொலைவு நடந்து சென்று தான்தோன்றிமலை நிறுத்தம் சென்று பஸ்சில் ஏறி செல்கின்றனர்.எனவே, தான்தோன்றிமலை பஸ் ஸ்டாப்பில் இருந்து கணபதிபாளையம், விக்னேஸ்வரா நகர், காமராஜ் நகர், பசுபதி நகர், சக்திபுரம், சிவாஜிநகர், அண்ணாநகர், மகாலட்சுமிநகர் வழியாக கரூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வரை மினி பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை