உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அடிப்படை வசதி தேவை கரூர் கலெக்டரிடம் மனு

அடிப்படை வசதி தேவை கரூர் கலெக்டரிடம் மனு

கரூர், கரூர் சிவசக்தி நகரில், 5வது தெருவில் அடிப்படை வசதி தேவை என அப்பகுதியை சேர்ந்த, பா.ஜ., நிர்வாகி குப்புராவ், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தார்.அதில், கூறியிருப்பதாவது:கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சிவசக்தி நகரில், 5 வது தெருவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.சாக்கடை கால்வாய் இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரம், காலி மனைகளில் தேங்கி நிற்கிறது. இதனால், கொசுத்தொல்லையால் அவதிப்படுகிறோம். காலி இடங்களில், கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் விஷஜந்துகள் நடமாட்டம் காணப்படுகிறது. அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ