உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் விற்பனைக்கு குவிந்த முலாம்பழம்

கரூரில் விற்பனைக்கு குவிந்த முலாம்பழம்

கரூர்: கோடைக்காலம் நெருங்கும் நிலையில், கரூரில் முலாம்பழங்கள், விற்பனைக்கு குவிந்துள்ளன.ஒவ்வொரு ஆண்டும், மார்ச் முதல் மே மாதம் வரை, கோடைக்காலமாகும். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்ற நிலையில், வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, தை மாதம் நிறைவு பெற்றுள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.கோடைக்காலங்களில், உடலுக்கு ஏற்படும் சூட்டை குறைக்கும் வகையில், வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, நீர்மோர், முலாம்பழம் ஆகியவைகளை பொதுமக்கள் விரும்பி சாப்பிடுவது உண்டு. இந்நிலையில், கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட், திருச்சி மற்றும் கோவை சாலைகளில், வேன்களில் முலாம்பழம் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, கரூர் பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ள முலாம் பழம், ஒரு கிலோ, 30 முதல், 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்