உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குழாய் பழுது; தோண்டிய குழி மூடாததால் விபத்து அபாயம்

குழாய் பழுது; தோண்டிய குழி மூடாததால் விபத்து அபாயம்

குளித்தலை: குடிநீர் குழாய் குழியை மூட வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.குளித்தலை அடுத்த, கே.பேட்டை பஞ்., ஐந்நுாற்றுமங்கலம் தேவேந்திரகுல வேளாளர் தெருவில் உள்ள குடிநீர் குழாய் பழுது ஏற்பட்டு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து,பஞ்., நிர்வாகம் சார்பில், மூன்று மாதங்களுக்கு முன்பு சரிபார்க்கப்பட்டது. தோண்டிய குழியை பஞ்., நிர்வாகம் மூடாமல் இருந்து வருகிறது. இதனால், இத்தெருவில் செல்லும் பொது மக்கள் குழியில் விழுந்து காயமடைகின்றனர். குழியை மூடவேண்டும் என,பஞ்,, நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. எனவே, பொது மக்கள் நலன் கருதி குடிநீர் குழாய் குழியை மூட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ