சிறுமி திருமணம் வாலிபர் மீது போக்சோ
ஈரோடு:ஈரோடு சூளை ஈ.பி.பி. நகர் மோகன் மகன் பிரேம் குமார், 21; தொழிலாளி. ஈரோட்டை சேர்ந்த, 16 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தினார். சில நாட்களுக்கு பின் சிறுமியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டு சென்றார். இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் படி, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளில் வழக்குப்பதிந்தனர்.