உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாலிபரை ஆயுதங்களால் தாக்கியநபர்கள் குறித்து போலீசார் விசாரணை

வாலிபரை ஆயுதங்களால் தாக்கியநபர்கள் குறித்து போலீசார் விசாரணை

கரூர்:வேலாயுதம்பாளையம் அருகே, வாலிபரை ஆயுதங்களால் தாக்கி விட்டு, தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.வேலாயுதம்பாளையம், புகழூர் மீனாட்சி நகரை சேர்ந்த பொன்னம்பலம் என்பவரது மகன் கார்த்திக், 30; இவர் கடந்த, 15 இரவு தோட்டக்குறிச்சி பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஆயுதங்களுடன் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள், கார்த்திக்கின் தலையில் அடித்து விட்டு, தப்பி விட்டனர். படுகாயமடைந்த கார்த்திக், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து, கார்த்திக் அளித்த புகாரின்படி, ஆயுதங்களுடன் வந்து தாக்கிய மர்ம நபர்களை, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ