உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்

கரூர்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு, கரூர் கிளை சார்பில் மாவட்ட தலைவர் செல்வமணி தலைமையில், தான்தோன்றிமலை வட்டார கல்வி அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், தொடக்கக் கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின், பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை எண், 243ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.மாவட்ட பொறுப்பாளர்கள் அன்பரசு, வெங்கடேஷன், செயலாளர் அமுதன் உள்பட, 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியைகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை