உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மார்ச் 15ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

மார்ச் 15ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கரூர்: வரும், 15ல் தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.கரூர் தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லுாரியில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வரும், 15ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் உற்பத்தி துறை, ஜவுளித்துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டி.துறை, ஆட்டோ மொபைல்ஸ், விற்பனைத்துறை, மருத்துவம் சார்ந்த துறைகள் உள்ளிட்ட, 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்காக, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணி இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.வேலைவாய்ப்பு முகாமில், 8 ம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, தொழிற்கல்வி பயின்றவர்கள், செவிலியர்கள், பொறியியல் மாணவர்கள் என அனைத்து பிரிவினரும் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை. பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும் முகாமில் கலந்துகொள்ள வேலை நாடுநர்களும், வேலையளிப்போரும் எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.வேலை நாடும் மனுதாரர்கள், www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விபரங்களை பதிவு செய்தல் வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 9345261136 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள், www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணையதளத்தில் அல்லது 9360557145 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !