உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பொதுமக்களிடம் பெறும் மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

பொதுமக்களிடம் பெறும் மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

கரூர்: பொதுமக்களிடம் பெறும் மனுக்களுக்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அனைத்து அரசு துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பேசியதாவது:கரூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், டவுன் பஞ்சாயத்து மற்றும் பஞ்., என 50 இடங்களில் நடத்தப்பட்ட முகாம்களில், பெறப்பட்ட மனுக்களின் மீது முன்னுரிமை கொடுத்து விரைந்து தீர்வுகாண வேண்டும். 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது, உரிய தீர்வு காண வேண்டும். அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சமத்துவபுரம் புனரமைப்பு பணிகள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.இவ்வாறு பேசினார்.டி.ஆர்.ஓ.,கண்ணன், மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாசன், கரூர் ஆர்.டி.ஓ., முகமதுபைசல், சப் கலெக்டர் சைபுதீன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை