மேலும் செய்திகள்
பாழாகும் சுகாதார வளாகம்
29-Aug-2025
கிருஷ்ணராயபுரம் :கிருஷ்ணராயபுரம் அடுத்த பஞ்சப்பட்டி பஞ்., சார்பில், பொது சுகாதார வளாக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த வளாகத்தை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, வளாகத்தை சுற்றி முள் புதர்கள் மண்டி காணப்படுகிறது. தண்ணீர் வசதி இருந்தும், குழாய்கள் உடைந்து காணப்படுகிறது. இதனால், சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், பஞ்சப்பட்டி பஸ் ஸ்டாப் பகுதிக்கு தினமும், 100க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பொது சுகாதார வளாகம் பராமரிப்பு இன்றி உள்ளதால், மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர். மக்கள் நலன் கருதி, சுகாதார வளாகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
29-Aug-2025