மேலும் செய்திகள்
லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை
04-Oct-2024
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை, பிள்ளபாளையம், வீரவள்ளி, கொம்பாடிப்பட்டி, வீரகுமாரன்பட்டி, மகாதானபுரம், பொய்கைபுத்துார் ஆகிய இடங்களில் விவாசயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன் ஆகிய ரகங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. விளைந்த வாழைத்தார்களை அறுவடை செய்து, லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டியில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. பூவன் வாழைத்தார், 300 ரூபாய், ரஸ்தாளி, 350, கற்பூரவள்ளி, 200 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் சென்றனர்.
04-Oct-2024