மேலும் செய்திகள்
1,100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
24-Sep-2024
கரூர்: கரூர் அருகே, ரேஷன் கடை அரிசி மூட்டைகளை பதுக்கிய, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல், குற்றப்புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன், எஸ்.ஐ., கார்த்திகேயன் உள்ளிட்ட போலீசார் நேற்று, கரூர் அருகே வேலாயுதம் பாளையம் பசுமை நகர் சாலையில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 1,000 கிலோ ரேஷன் கடை அரிசியை, பாலீத்தின் மூட்டைகளில், மாருதி வேனில் பதுக்கி வைத்திருந்ததாக நாமக்கல்லை சேர்ந்த கணேசன், 35; என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து, 1,000 கிலோ ரேஷன் அரிசி மற்றும் வேனும் பறிமுதல் செய்யப்பட்டது. நாளை வெள்ளாடுவளர்ப்பு பயிற்சி முகாம்கரூர், அக். 8-- வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முகாம் நாளை நடக்கிறது என, பண்டுதகாரன்புதுார் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம், பண்டுதகாரன்புதுாரில் அமைந்துள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில், 'வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு' என்ற தலைப்பில் நாளை (9ம் தேதி) ஒரு நாள் இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் அன்று காலை, 10:30 மணிக்குள் வந்து நேரடியாக பங்கேற்கலாம். மேலும் தகவலுக்கு 04324 294335 மற்றும் 7339057073 ஆகிய எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
24-Sep-2024