உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிவப்பு சோளம் அறுவடை தொழிலாளர்கள் மும்முரம்

சிவப்பு சோளம் அறுவடை தொழிலாளர்கள் மும்முரம்

கிருஷ்ணராயபுரம், வயலுார் பகுதியில் சிவப்பு சோளம் பயிர்கள் அறுவடை பணி நடந்து வருகிறது.கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சரவணபுரம், வரகூர், வயலுார், நடுப்பட்டி, பாம்பன்பாட்டி பகுதிகளில் சிவப்பு சோளம் பயிர்கள் சாகுபடி நடந்து வருகிறது. சோளம் பயிர்களுக்கு கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது வளர்ச்சியடைந்த சோளம் விளைச்சல் கண்டுள்ளது. இவை, விவசாய கூலி தொழிலாளர்களை கொண்டு அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது. சோளத்தட்டு கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது. இப்பகுதியில், 30 ஏக்கர் பரப்பளவில் சோளம் அறுவடை பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை