உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நாமகிரிப்பேட்டை அருகே ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

நாமகிரிப்பேட்டை அருகே ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பெருமாகவுண்டம்பாளையம் பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். சிலர், அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து வீடுகளை கட்டியுள்ளதால் அவ்வழியாக கனரக வாகனங்கள் செல்ல முடியவில்லை என புகார் இருந்து வந்தது. இதையடுத்து தாசில்தார் சரவணன் தலைமையில், சில வாரங்களுக்கு முன்பு அப்பகுதியில் அளவீடு செய்தனர். தொடர்ந்து ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், கிராம மக்கள் கருப்பு கொடி கட்டி போராட்டம், சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டங்களில் ஈடுபட்டனர்.இதையடுத்து கலெக்டர் உமா சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்தார். இரண்டு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு பிறகு, நேற்று பெருமாகவுண்டம்பாளையத்தில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளின் சுற்றுச்சுவர், மரங்கள், வீடுகள் மற்றும் கழிவறைகள் பொக்லைன் மூலம் அகற்றினர். வீடுகளை அகற்றும்போது, பொதுமக்கள் அழுதனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி