மேலும் செய்திகள்
அண்ணனுார் சாலையில் வேகத்தடை வேண்டும்
26-Jun-2025
கரூர், கரூர் அருகே, கடை வாடகை வாங்குவதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, தம்பியை அடித்து உதைத்த அண்ணன் உள்பட, நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.கரூர் மாவட்டம், எல்.என்.எஸ்., கோதை நகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், 55; இவருக்கும், அவரது அண்ணன் சதாசிவம், 57, என்பவருக்கும், கடை வாடகை பணம் வாங்குவதில், ஏற்கனவே முன் விரோதம் உள்ளது. இந்நிலையில் கடந்த, 5ம் தேதி இரவு சக்திவேல் டூவீலரில், அருகம்பாளையம் அம்மா சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சதாசிவம் உள்பட, நான்கு பேர் சக்திவேலுவை வழிமறித்து அடித்து உதைத்துள்ளனர்.அதில் படுகாயமடைந்த சக்திவேல், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து, சக்திவேல் அளித்த புகாரின்படி, அவரது அண்ணன் சதாசிவம் உள்பட, நான்கு பேர் மீது, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
26-Jun-2025