உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலை பகுதியில் அடிக்கடி மின்தடை துணை மின் நிலையம் அமைக்க கோரிக்கை

குளித்தலை பகுதியில் அடிக்கடி மின்தடை துணை மின் நிலையம் அமைக்க கோரிக்கை

குளித்தலை, குளித்தலை நகரம் மற்றும் தண்ணீர்பள்ளி, ராஜேந்திரம், மருதுார் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள குடியிருப்புகள் மற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், மருத்துவமனை திரையரங்கம் உள்ளிட்டவைகளுக்கு, திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. மருதுார், ராஜேந்திரம், தண்ணீர்பள்ளி பகுதிகளில் எதிர்பாராத விதமாக ஏற்படும் மின் தடையால் குளித்தலை நகரம் முழுவதும் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, குளித்தலை நகர பகுதிக்கு தனியாக துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.பொதுமக்கள் பாதிக்காத வகையில், குளித்தலைக்கு துணை மின் நிலையம் அமைப்பதற்கான உத்தரவாதத்தை, வரும் இறுதி சட்டசபை கூட்டத்தொடரில் தமிழக அரசு அறிவித்து, அதற்கான இடத்தையும் தேர்வு செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை