உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டி மீட்பு

கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டி மீட்பு

கிணற்றில் விழுந்தஆட்டுக்குட்டி மீட்புஅரவக்குறிச்சி, நவ. 22-அரவக்குறிச்சி அருகே, தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டியை, தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அரவக்குறிச்சி அருகே வெரிச்சனம்பட்டி கிராமத்தில் வசிப்பவர் விவசாயி தங்கராஜ். இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, வழி தவறிய ஆடு ஒன்று, 60 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் ஆட்டுக்குட்டி விழுந்தது. இதையடுத்து அரவக்குறிச்சி தீயணைப்பு மீட்பு பணி நிலைய சிறப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான வீரர்கள், 60 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் இறங்கி ஆட்டுக்குட்டியை உயிருடன் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை