உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நீட்டிய நிலையில் உடைந்த மின் கம்பத்தால் விபத்து அபாயம்

நீட்டிய நிலையில் உடைந்த மின் கம்பத்தால் விபத்து அபாயம்

கரூர்:கரூர் அருகே, உடைந்த மின் கம்பம் சரிவர அகற்றப்படாததால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கரூர் சுங்ககேட்-தான்தோன்றிமலை சாலை வரை சமீபத்தில், புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. அப்போது, சாலையில் இருந்த, சென்டர் மீடியன்கள் அகற்றப்பட்டன. ஆனால், மின் கம்பங்கள் மட்டும் சாலையின் நடுவே உள்ளது.அதில், சிவசக்தி நகர் பகுதியில் இருந்த, ஒரு மின் கம்பம் உடைந்து விட்டது. அதை முழுமையாக அகற்றாத நிலையில், இரும்பு கம்பிகள் நீட்டிய நிலையில் உள்ளது. அதை, சிவப்பு துணி சுற்றி மூடி வைத்துள்ளனர்.மேலும், தார் சாலை அமைக்கும் பணி நிறைவு பெற்று, பல நாள் ஆகியும் சென்டர் மீடியன்களை, பழைய நிலையில் வைக்கவில்லை.அந்த சாலையில், வீடுகள், வங்கி, மருத்துவமனைகள் ஆகியவை உள்ளன. உடைந்த மின் கம்பத்தால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கரூர் சுங்ககேட் சிவசக்தி நகரில், உடைந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு, சென்டர் மீடியன்களை, மீண்டும் வைக்க மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ