உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வேகத்தடைகளில் சுண்ணாம்பு தண்ணீரால் விபத்து அபாயம்

வேகத்தடைகளில் சுண்ணாம்பு தண்ணீரால் விபத்து அபாயம்

கரூர்: கரூர் அருகே, புதிய சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளில், சுண்ணாம்பு தண்ணீர் தெளிக்கப்பட்டுள்ளது. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கரூர் சுங்ககேட் முதல் வெள்ளியணை சாலை, வட்டார போக்கு வரத்து அலுவலகம் வரை, புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில், புதிதாக வேகத்தடைகள் போடப்பட்டுள்ளது. ஆனால், அதன் மீது இரவு நேரத்தில் ஒளிரும் வகையில், வெள்ளை நிற கோடு போடாமல், சுண்ணாம்பு தண்ணீரை சாலையில் பணியாளர்கள் தெளித்து உள்ளனர். அந்த சுண்ணாம்பு தண்ணீரும், அதிகளவில் வாகனங்கள் சென்றதால், அழிந்து வருகிறது.சுங்ககேட் முதல், வட்டார போக்குவரத்து அலுவலகம் வரை, அரசு கலைக்கல்லுாரி, நீதிமன்றம், கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம் மற்றும் ஏராளமான வீடுகள், அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளது. இந்நிலையில், வேகத்தடையில் வெள்ளை கோடுகள் போடாமல், சுண்ணாம்பு தண்ணீர் தெளிக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, வேகத்தடைகளில் இரவு நேரத்திலும், ஒளிரும் வகையில், வெள்ளை கோடுகளை போட, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி