உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

அரவக்குறிச்சியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

அரவக்குறிச்சி : அரவக்குறிச்சியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, அரவக்குறிச்சி காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. துணை டி.எஸ்.பி., அப்துல் கபூர் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். அரவக்குறிச்சி காவல்துறை, தீயணைப்பு துறை, அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பேரணியில் பங்கேற்றனர்.சாலை விதிகளை மதிப்போம், விபத்தில்லா தமிழ்நாட்டை படைப்போம், மொபைல்போன் பேசியபடி வாகனம் ஓட்டாதீர், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டாதீர், பஸ்களில் படியில் நின்று பயணம் செய்யாதீர், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டாதீர், குடிபோதையில் வாகனம் ஓட்டாதீர் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர்.அரவக்குறிச்சி இன்ஸ்பெக்டர் கோபி, எஸ்.ஐ.,ராஜாசேர்வை, அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் காளீஸ்வரி, தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை