உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரதம்

ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரதம்

கரூர்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலை மையில், வட்-டார போக்குவரத்து அலுவலகம் முன், நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றக் கூடாது. மாநில அரசுகளின் நிதியை, மத்திய பா.ஜ., அரசு குறைக்க கூடாது. 100 நாள் வேலை திட்டம் தொடர்பான, மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பன உள்-ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.போராட்டத்தில், மாநில துணைத்தலைவர் திரு-வரங்கன், மாவட்ட செயலாளர் வினோத்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். *கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில், க.பரமத்தி பஞ்., யூனியன் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்-பாட்டம் நடந்தது. அதில், 2000 ம் ஆண்டுக்கு முன் சேர்ந்த ஓ.எச்.டி., ஆப்ரேட்டர்களுக்கு, 6,040 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும், துாய்மை பணியா-ளர்களின் காப்பீடு தொகையை, முறையாக செலுத்த வேண்டும், மூன்று ஆண்டு பணியை நிறைவு செய்த, துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்க வேண்டும், அனைத்து ஊழியர்களுக்கும் அடையாள அட்டை, கையுறை உள்-ளிட்ட, பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியு-றுத்தப்பட்டன.மாவட்ட துணைத்தலைவர் ஜோதிமணி, பொருளாளர் கணேசன், நிர்வாகி கள் ராமலிங்கம், பழனிசாமி, அன்பழகன், முத்துசாமி, முருகேசன், முருகன் உள்பட, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ