உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தபால் நிலையங்களில் இன்று முதல் தங்கப்பத்திரம் விற்பனை தொடக்கம்

தபால் நிலையங்களில் இன்று முதல் தங்கப்பத்திரம் விற்பனை தொடக்கம்

கரூர்:கரூர் மாவட்ட தபால் நிலையங்களில், இன்று முதல் தங்கப்பத்திரம் வாங்கி கொள்ளலாம் என, அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராஜ் குமார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கரூர் கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில், தேசிய தங்கப்பத்திரம் விற்பனை இன்று முதல் வரும், 16 வரை நடக்கிறது. 24 கேரட் தங்கத்தின் விலை, கிராம் ஒன்றுக்கு, 6,263 ரூபாய். தனிநபர் இந்த திட்டத்தில், ஒரு கிராம் முதல் நான்கு கிலோ வரை பணம் முதலீடு செய்து பத்திரம் பெற்றுக்கொள்ளலாம். முதலீடு செய்துள்ள பணத்துக்கு ஆண்டுக்கு, 2.5 சதவீத வட்டி தொகை, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, முதலீட்டாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த பத்திரத்தை முதலீடு செய்த தேதியில் இருந்து, எட்டு ஆண்டுக்கு பின், முதிர்வு தொகையை ரூபாயாக பெற்று கொள்ளலாம்.இதன் மூலம், தங்கம் காகித வடிவில் பத்திரத்தில் மட்டும் இருக்கும். திருட்டு அபாயம் இல்லை. இந்த பத்திரம் பெற, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், பான்கார்டு நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் கட்டாயம் இணைக்க வேண்டும். கரூர் அஞ்சல் கோட்டத்தில் உள்ள, அனைத்து தலைமை, துணை, கிளை தபால் நிலையங்களில் தங்கப்பத்திரம் பெற, வசதி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்