உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் அறிவியல் கண்காட்சி 109 படைப்புகள் காட்சிபடுத்தல்

கரூரில் அறிவியல் கண்காட்சி 109 படைப்புகள் காட்சிபடுத்தல்

கரூர்: கரூர் காந்திகிராமத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவியல் கண்காட்சி நடந்தது. கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்து கூறியதாவது: கரூர் மாவட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பயிலும், 8 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், கணிதம், பூமி மற்றும் விண்வெளி அறிவியல், சுற்றுச் சூழல் அறிவியல், பொறியியல், உயிரியல், கணினி அறிவியல் சார்ந்த படைப்பாற்றல் திறன், தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றைக் கண்டறியும் வகையிலும் வளப்படுத்தும் வகையிலும் கண்காட்சி நடக்கிறது. இதில், மாணவர்களின் படைப்புகள் ஒரு மாணவர் ஓர் ஆசிரியர் படைப்பு, இரண்டு மாணவர்கள் ஓர் ஆசிரியர் படைப்பு மற்றும் ஓர் ஆசிரியர் படைப்பு என்ற பிரிவுகளில் மொத்தம், 109 படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 80 பள்ளிகளிலிருந்து, 162 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.மாவட்ட அளவில் நடந்த கண்காட்சியில் முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் படைப்புகள், கடலுார் மாவட்டத்தில், நாளை நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. மாநில அளவில் வெற்றி பெறவுள்ள போட்டியாளர்கள், ஆந்திர மாநிலத்தில் நடைபெறும் தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில் கலந்து கொள்வர்.இவ்வாறு கூறினார்.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுமதி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை