| ADDED : நவ 17, 2025 04:05 AM
கரூர்: கரூர் பரணி பார்க் பள்ளியில், நிறுவன அறங்காவலர் சாமியப்பர் நினைவு அறிவியல் திருவிழா நடந்தது. இதில், பரணி பார்க் கல்வி குழும தாளாளர் மோகனரங்கன் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்) செல்வமணி கலந்து கொண்டார். இரண்டு நாட்கள் நடந்த குழந்தைகள் அறிவியல் திருவிழாவில் ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, அறிவியல் தத்துவங்களை எளிய முறையில் விளக்கும் ஆய்வுகள் உள்ளிட்ட, 342 அறி-வியல் படைப்புகள், ஆய்வுகள், 2,000 இளம் அறிவியல் விஞ்-ஞானிகளால் காட்சிப்படுத்தப்பட்டன.அறிவியல் அரங்குகள், பாரம்பரிய உணவு கொண்டாட்டம், 2000 ஆண்டு பழமையான தமிழியில் பெயர் எழுதும் அரங்கு, வந்தே மாதரம், 150-ம் ஆண்டு கொண்டாட்டம், ஜப்பான் பண்பாட்டு அரங்கம், மாணவர் ஓவியம் மற்றும் கலைப்பொருட்கள் கண்-காட்சி நடந்தது. விழாவில், பரணி பார்க் கல்வி குழும செயலர் பத்மாவதி மோகனரங்கன், முதன்மை முதல்வர் ராமசுப்ர-மணியன், அறங்காவலர் சுபாஷினி அசோக் சங்கர், பரணி வித்யா-லயா முதல்வர் சுதாதேவி, பரணி பார்க் முதல்வர் சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.