உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிலம்பம் திறனாய்வு தேர்வு: தகுதிப்பட்டை வழங்கல்

சிலம்பம் திறனாய்வு தேர்வு: தகுதிப்பட்டை வழங்கல்

குளித்தலை: குளித்தலை கலைமகள் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், நேற்று காலை, 9:00 மணிக்கு, பஞ்சபூதா சர்வதேச தற்காப்பு கலை சம்-மேளனம் மற்றும் சர்வதேச சிலம்பக்கலை கழகம் இணைந்து சிலம்பம் திறனாய்வு தேர்வு மற்றும் தகுதி பட்டை வழங்கும் விழா நடத்தின. குளித்தலை நகர்மன்ற தலைவர் சகுந்தலா, விழாவை துவக்கி வைத்தார். குளித்தலை நகர்மன்ற உறுப்பினர்கள் சேகர், ஆனந்தலட்சுமி, மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். பஞ்சபூதா சர்வதேச தற்-காப்பு கலை சம்மேளனத்தின், கரூர் மாவட்ட தலைமை பயிற்சி-யாளர் கதிரேசன் வரவேற்றார்.குளித்தலை இன்ஸ்பெக்டர் கருணாகரன், முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் சித்ரா ஆகியோர், சிறுவர், சிறுமியரை ஊக்கப்படுத்தி தகுதி பட்-டயம், சான்றிதழ் வழங்கினர். முன்னதாக சிறுவர், சிறுமியர் சிலம்பத்தின் பல்வேறு சிறப்பு-களை செய்து அசத்தினர். அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள், பெற்றோர், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர். பஞ்சபூதா சர்வதேச தற்காப்பு கலை சம்மேளன நிறுவனர் கின்னஸ் சாதனையாளர் சதீஷ்குமார் தொகுத்து வழங்கி, சிலம்பத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ