உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிலவரி செய்திகள்: கரூர்

சிலவரி செய்திகள்: கரூர்

ரேஷன் அரிசி கடத்தல்வேனுடன் வாலிபர் கைதுகரூர்: கரூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெ க்டர் செந்தில் குமார் உள்ளிட்ட, போலீசார் நேற்று முன்தினம் இரவு, சின்னதாராபுரம் ஒத்தமாந்துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மாருதி ஆம்னி வேனில், 11 மூட்டைகளில், 550 கிலோ ரேஷன் அரிசியை, கடத்தி வந்த திருப்பூர் மாவட்டம், வெள்ளக் கோவில் பகுதியை சேர்ந்த சுரேஷ், 40; என் பவரை கைது செய்தனர்.மேலும், அவரிடமிருந்து ஆம்னி வேன், ரேஷன் அரிசி மூட்டைகளையும், போலீசார் பறிமுதல் செய்தனர்.புகையிலை பொருள் பறிமுதல்இரண்டு பேர் தலைமறைவுகுளித்தலை: குளித்தலை அருகே, 110 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.குளித்தலை அடுத்த, தோகைமலை எஸ்.ஐ., பாலசுப்பிரமணியன் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, நாக நோட்டக்காரன் பட்டி அண்ணாதுரை என்பவரின் வீட்டு அருகே உள்ள தகர கொட்டகையில் சோதனை செய்தனர். அதில் ஹான்ஸ், 100 கிலோ, கூல் லிப், 5 கிலோ, விமல் பாக்கு, 5 கிலோ இருந்தது.புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, காரணம்பட்டியை சேர்ந்த ராஜலிங்கம், 41, மணப்பாறை அடுத்த கீழபூசாரிபட்டி சேர்ந்த சரவணன் ஆகிய இருவர் மீது, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து, இருவரையும் தேடி வருகின்றனர்.மொபட் மோதிமுதியவர் பலிகரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, நடந்து சென்ற முதியவர் மீது, மொபட் மோதியதில் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சாந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன், 70; இவர், நேற்று முன்தினம் வேலாயுதம்பாளையம்-கொடுமுடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, தென்னிலை பாண்டிப்புரம் பகுதியை சேர்ந்த தினேஷ் குமார், 19, என்பவர் ஓட்டி சென்ற டி.வி.எஸ்., மொபட், பழனியப்பன் மீது மோதியது. அதில், தலையில் படுகாயம் அடைந்த பழனியப்பன், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் உயிரிழந்தார்.வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.வாலிபருக்கு கத்திக்குத்துகொலை மிரட்டல்குளித்தலை,: -குளித்தலை, சவுடேஸ்வரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக், 28. நேற்று முன்தினம் இரவு பெரியபாலம் டாஸ்மாக் கடை அருகே நடந்த சென்றார். அப்போது, குளித்தலையை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ஸ்ரீராம், 27, என்பவர் வீண் தகராறு செய்து, கையாளும், கத்தியாலும், தாக்கி ரத்தக்காயத்தை ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார்.பாதிக்கப்பட்ட கார்த்திக் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு ஸ்ரீராமை கைது செய்தனர்.வேலாயுதம்பாளையத்தில்காயகல்ப பயிற்சிகரூர், ஜூன் 4-கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் உள்ள வள்ளுவர் தவ மையத்தில், மனவளக்கலை மன்றம் சார்பில், காயகல்ப பயிற்சி நடந்தது. சேலம் பேராசிரியர் ராஜேந்திரன், பொதுமக்களுக்கு காயகல்ப பயிற்சியளித்தார். தியானம், யோகாசனங்கள் போன்ற பயிற்சி மேற்கொள்வதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார். முகாமில் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை