உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கழிவுநீர் வடிகாலை துார்வார சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

கழிவுநீர் வடிகாலை துார்வார சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

குளித்தலை: குளித்தலை நகராட்சி பகுதியில், 24 வார்டுகள் உள்ளன. இதில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பாசன கண்ணாறு துார்ந்து போய், கழிவுநீர் வடிகாலாக மாறியுள்ளது. இந்நிலையில் மற்ற பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகாலில், மழைத்தண்ணீரில் மண் அரிப்பு ஏற்பட்டு, கழிவு நீர் வடிகால் துார்ந்து போயுள்ளது.மேலும், பொது குடிநீர் குழாய் மற்றும் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும், பொது கழிவுநீர் வடிகாலில் தேங்கி நிற்கிறது. மழை நீர், கழிவு நீர் உடனே வெளியேறும் வகையில், துார்ந்து போயுள்ள கழிவுநீர் வாய்க்காலை துார்வார வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை