உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மண்வள அட்டை

வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மண்வள அட்டை

அரவக்குறிச்சி: வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்படுகிறது.க.பரமத்தி வட்டாரத்தில், கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சின்னதாராபுரம், க.பரமத்தி, சூடாமணி, கூடலுார் மேற்கு, ராஜபுரம் ஆகிய ஐந்து ஊராட்சிக-ளுக்கு உட்பட்ட கிராமங்கள் இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்-பட உள்ளது. இந்த திட்டத்திற்கான அறிக்கை தயார் செய்து அந்-தந்த கிராமத்தில் கிராம முன்னேற்ற குழு தொடங்கப்பட்டுள்ளது. சின்னதாராபுரம் ஊராட்சி, வெங்கடாபுரம் பகுதியில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், திட்ட மதிப்-பீடு அறிக்கை, கிராம முன்னேற்றத்திற்கான தேவையான செயல்-பாடுகள் குறித்து, கிராம முன்னேற்ற குழு கூட்டம் நடைபெற்றது.வேளாண்மை உதவி இயக்குனர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, வேளாண்மை பொறியியல் துறைகளை உள்ளடக்கி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஐந்து ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில், வேளாண்மை துறை சார்பில் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மூலமாக, விவசாய நிலங்களில் மண் சேகரிப்பு எடுக்கப்பட்டு, முழு மானி-யத்துடன் பகுப்பாய்வு செய்து மண்வள அட்டை வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி