உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நெருங்கும் தென்மேற்கு பருவமழை மண் பரிசோதனை செய்ய எதிர்பார்ப்பு

நெருங்கும் தென்மேற்கு பருவமழை மண் பரிசோதனை செய்ய எதிர்பார்ப்பு

கரூர்: தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்ட துவங்கியுள்ள நிலையில், விவசாய நிலங்களில் மண் பரிசோதனை செய்து, அட்-டைகள் வழங்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.ஆண்டுதோறும், ஜூன் முதல் வாரத்தில் கேரளா கடற்கரை பகு-தியில் தென்மேற்கு பருவமழை துவங்கும். நடப்பாண்டு கடந்த மே மாதம், இறுதியில் மழை தொடங்கியது. பின், கேரளா, கர்நா-டகா மற்றும் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மழை தீவிரம் காட்டி வருகிறது. செப்டம்பர் மாதம் வரை, 70 சதவீத தென்-மேற்கு பருவமழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை பெய்து வரு-வதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆற்றில் விரைவில் கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. மேலும், காவிரி நீர்ப்பி-டிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், கர்நாடகா அணை-களில் இருந்து, உபரி நீர் தமிழகத்துக்கு திறந்து விடப்படுகிறது. இதனால், குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன், 12 முதல் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. மேலும், சராசரி அளவு மழை பெய்யும் மாவட்டங்களாக கரூர், திருச்சி, தஞ்சாவூர் என கண்டறியப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் உற்பத்தியை துவக்க வசதியாக, மண் பரிசோதனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு, தென்மேற்கு பருவ மழை ஓரளவுக்கு கை கொடுக்கும் என தெரிகிறது. காவிரி, அம-ராவதி ஆறு பாயும் மாவட்டமான கரூர் மற்றும் திருச்சி, தஞ்-சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தில் உள்ள, விவசாய நிலங்-களில் மண் பரிசோதனையை தீவிரப்படுத்தி, மண்ணின் தன்மை, என்ன பயிரிடலாம் என்பது குறித்து விவசாயிகளுக்கு விழிப்பு-ணர்வை ஏற்படுத்தி, அதிகளவில் அட்டை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ