உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புதிய பாலம் கட்ட மண் பரிசோதனை

புதிய பாலம் கட்ட மண் பரிசோதனை

குளித்தலை: குளித்தலை அடுத்த, மேட்டுமருதுாரில் கொடிங்கால் வடிகால் நெடுஞ்சாலையில், 80 ஆண்டுகளுக்கு முன், கருங்கல்லால் ஆன கல்லு பாலம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. கடந்த மாதம் தொடர்ந்து பெய்த கன மழையால், பாலத்தில் விரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மேட்டுமருதுார் கிராம மக்கள், விவசாயிகள் சார்பில் மருதுார் டவுன் பஞ்சாயத்து, தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட நிர்வாகத்-திற்கு புதிய பாலம் கட்ட கோரிக்கை அளித்தனர். இதையடுத்து, மருதுார் டவுன் பஞ்,. சார்பில் புதிய பாலம் கட்டுவதற்காக, மண் பரிசோதனை செய்ய கோவை சி.ஐ.டி., கல்லுாரி சார்பில் மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.டவுன் பஞ்., தலைவர் சகுந்தலா உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை