உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பேச்சு போட்டி

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பேச்சு போட்டி

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வட்டார அளவிலான பேச்சு போட்டி நடத்தப்பட்டது.கிருஷ்ணராயபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வட்டார அளவில் அம்பேத்கர், கருணாநிதி ஆகியோரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பேச்சு போட்டி நடத்தப்பட்டது. அம்பேத்கர் என்ற தலைப்பில், எட்டு மாணவர்களும், கருணாநிதி என்ற தலைப்பில். எட்டு மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டனர். இங்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், கரூரில் நடக்கும் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ரெத்தினம், தமிழாசிரியர் மணிகண்டன், விஸ்வநாதன், சுஜாதா, தனலட்சுமி, மணிகண்டன், ஆரோக்கியராஜ், வெங்கடேஸ்வரி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை