உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

குளித்தலை: குளித்தலை அடுத்த, முள்ளிப்பாடியில் கடவூர் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக, சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்து வருகிறது. முள்ளிப்பாடி பஞ்., தலைவர் நீலா வேல்முருகன் தலைமை வகித்தார். கால்நடை உதவி மருத்துவர் கோமத்தீஸ்வரி முன்னிலை வகித்தார். முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் பிரேம்குமார், செந்தில், மணிகண்டன், ரேணுகாதேவி ஆகியோர், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.கால்நடைகளுக்கு நோய் தடுப்பு முறை, செம்மறி ஆடுகள், வெள்ளாடுகளுக்கு மழை காலங்களில் நோய் பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு வழங்கினர். மேலும், கால்நடைகள் குறித்து சிறு கண்காட்சி அமைக்கப்பட்டு கால்நடை வளர்க்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பண்ணப்பட்டி பஞ்., ரெங்கபாளையம் பகுதிகளில் கன்றுகள் பேரணி நடந்தது. இதில் சிறந்த கிடாரி கன்று தேர்வு செய்யப்பட்டு, மூன்று கன்றுகளுக்கு சிறப்பு பரிசு, கால்நடை வளர்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மைக்கான விருது மூவருக்கு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை