உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ் வசதி: கலெக்டர் தகவல்

தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ் வசதி: கலெக்டர் தகவல்

கரூர்: ''ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு நடக்க உள்ள மையங்களுக்கு, சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு-4 தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. அதில், மாவட்ட கலெக்டர் தங்கவேல் பேசியதாவது:கரூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு-4 நாளை நடக்கிறது. தேர்வு நடைபெறும் மையங்களில், பாதுகாப்பு பணிக்காக, 99 ஆயுதம் தாங்கிய காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நடக்க உள்ள மையங்களுக்கு, சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.தேர்வு மையங்களில் மருத்துவ குழு, குடிநீர், கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில், 99 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வர்களின் வருகைப்பதிவை காலை, 10:30 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.ஆலோசனை கூட்டத்தில், டி.ஆர்.ஓ., கண்ணன், ஆர்.டி.ஓ., முகமது பைசல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ, கருவூல அலுவலர் வேங்கடசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ