உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிருஷ்ணராயபுரம் பஞ்.,களில் சிறப்பு கிராம சபை கூட்டம்

கிருஷ்ணராயபுரம் பஞ்.,களில் சிறப்பு கிராம சபை கூட்டம்

கிருஷ்ணராயபுரம் பஞ்.,களில் சிறப்பு கிராம சபை கூட்டம்கிருஷ்ணராயபுரம், நவ. 24-கிருஷ்ணராயபுரம் யூனியனுக்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில், உள்ளாட்சி தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.கிருஷ்ணராயபுரம் யூனியனுக்கு உட்பட்ட, கருப்பத்துார் பஞ்., கிராம சபை கூட்டம் குழந்தைப்பட்டி கிராமத்தில் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் ரெங்கம்மாள் தலைமை வகித்தார். இதில் குடிநீர் பிரச்னை, 100 நாள் திட்ட வேலை, துாய்மை பணி உள்பட பல கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டது. வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலாளர் சிதம்பரம் செய்திருந்தார்.* கள்ளப்பள்ளி பஞ்., கிராம சபை கூட்டம் பஞ்சாயத்து அலுவலக வளாகம் முன் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். பஞ்சாயத்து வளர்ச்சி பணிகள், துாய்மை பணிகள், குடிநீர் வசதி, சாலை வசதி, தெரு விளக்கு பராமரிப்பு ஆகியவை குறித்து பேசப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை