உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் அரவக்குறிச்சி, டிச. 8-அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, பள்ளபட்டி நகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. நகராட்சி கமிஷனர் ஆர்த்தி தலைமை வகித்தார். 10க்கும் மேற்பட்ட டாக்டர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர், பள்ளப்பட்டி நகராட்சியில் பணிபுரியும், 50க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்களுக்கு பரிசோதனை மற்றும் மருத்துவ சிகிச்சை அளித்தனர். நகராட்சி தலைவர் முனவர் ஜான், முகாம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி