உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கரூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கரூர், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று பல்வேறு இடங்களில் நடக்கிறது என, கலெக்டர் தங்க வேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், இன்று நடக்கிறது. கரூர் மாநகராட்சியில் 8, 9 வது வார்டுகளுக்கு, வெங்கமேடு மீனாட்சி மண்டபத்திலும், குளித்தலை நகராட்சியில் 18, 19, 20வது வார்டுகளுக்கு, காவிரி நகர் அண்ணா சமுதாய மண்டபத்திலும், பள்ளப்பட்டி நகராட்சியில், 11, 21வது வார்டுகளுக்கு, தெற்கு மந்தை தெரு ஷாதி மஹாலிலும், க.பரமத்தி வட்டாரம், அஞ்சூர், துக்காச்சி ஆகிய பஞ்சாயத்துகளுக்கு, குப்பக்கவுண்டன்வலசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகிலும் நடக்கிறது.கரூர் வட்டாரம், மண்மங்கலம் பஞ்சாயத்தில், மண்மங்கலத்தில் உள்ள கே.டி.எல்.ஓ.ஏ., மண்டபத்திலும், அரவக்குறிச்சி வட்டாரம், வெஞ்சமாங்கூடலுார் (கிழக்கு) மற்றும் வெஞ்சமாங்கூடலுார் (மேற்கு) ஆகிய பஞ்சாயத்துகளுக்கு, வெஞ்சமாங்கூடலுார் சமுதாய கூடத்திலும் முகாம் நடக்கிறது. மேற்குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில், பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை